தனிமையில் இருப்பதை எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்- தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

ஆரோக்கிய தாஸ் மற்றும் இறந்த ரோஜாவுக்கு இடையிலான உறவு பற்றியும், கொலைக்கான வேறு  காரணம் ஏதும் இருக்கிறதா என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

Oct 28, 2024 - 16:47
0 1.2
தனிமையில் இருப்பதை எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்- தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

பட்டுக்கோட்டை அருகே வீட்டில் தனிமையில் இருந்ததை எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரரை தட்டிக்கேட்ட பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி ரோஜா வயது 32 .இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் ரோஜாவை அருவாளால் கழுத்தை வெட்டி கொலை செய்தது அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

கொலை செய்யப்பட்டு இறந்த  ரோஜா இன்று  காலை  100 நாள் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ்,  திடீரென வீட்டிற்குள் புகுந்து அவரது கழுத்தை  அறுத்து கொலை செய்து பிரேதத்தை அப்புறப்படுத்தும் நோக்கத்தில் இழுத்துச் சென்ற பொழுது  போது ஊர் காரர்கள் பார்த்து எதிரியை பிடித்து கட்டி வைத்துள்ளனர். தொடர்ந்து  காவல்துறைக்கு தகவல் கூறியதில் வாட்டாத்தி கோட்டை போலீசார்,   ஒரத்தநாடு ஏஎஸ்பி ஷஹ்னாஸ் இலியாஸ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆரோக்கியதாசின் மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு,  இன்று  இறந்து போன ரோஜாவும் அவரது கணவரும் வீட்டில் தனிமையில் இருந்ததை ஆரோக்கியதாஸ்  ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததாக தெரிய வருகிறது. இதனை தெரிந்து கொண்ட இரண்டு தரப்பிற்கும் அடிக்கடி வாய் சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்த முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஆரோக்கிய தாஸ் மற்றும் இறந்த ரோஜாவுக்கு இடையிலான உறவு பற்றியும், கொலைக்கான வேறு  காரணம் ஏதும் இருக்கிறதா என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார்  ஆரோக்கியதாசை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  பட்டப் பகலில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 1

Comments (0)

User