மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு...கோயில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்..
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயில் திருவிழாவிற்கு பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் கலியனாண்டி. இவரது மகன் கல்யாணகுமார் (19), கிருஷ்ணன்கோவில் தனியார் கல்லூரியில் B.Com., CA இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா இன்று (22-04-2024) நடைபெற இருந்தது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வந்தனர். அந்த வகையில், திருவிழாவை முன்னிட்டு பேனர் வைப்பதற்காக, அதன் கம்பியை தூக்கிக்கொண்டுச் செல்லும்போது, வத்திராயிருப்பு நாடார் பஜார் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் வயரில் கம்பி உரசி, மின்சாரம் தாக்கியதில் கல்யாணகுமார் மயக்கம் அடைந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக கல்யாணகுமாரை மீட்ட அப்பகுதி மக்கள், அவரை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கல்யாண்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)