பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - போக்சோவில் இளைஞர் கைது

வேலூரில்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

Oct 05, 2024 - 11:32
0 769
பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - போக்சோவில் இளைஞர் கைது
arrest

வேலூர் மாநகர் கஸ்பா தென்ன மரத்தெருவை சேர்ந்தவர் கார்த்தி. 20 வயதாகும் கார்த்தி கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படித்து வரும்  மாணவியைக் காதலிப்பதாகக் கூறி உள்ளார். அவரது காதலை அந்த மாணவி ஏற்க மறுத்துள்ளார். அதன் பின்னரும் அம்மாணவில் பள்ளிக்குச் செல்லும்போதும் திரும்ப வரும்போதும் பின்தொடர்ந்து சென்று காதலிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். தன்னைக் காதலிக்கவில்லை என்றால் உன் குடும்பத்தினரை ஏதாவது செய்து விடுவேன் என்று கார்த்தி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 

அந்த மிரட்டலால் பயந்துபோன அம்மாணவி, கார்த்தியைக் காதலிப்பதாகக் கூறி உள்ளார். அதன் பிறகு  இதனை சாதகமாக எடுத்து கொண்ட கார்த்தி அந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மாணவி இதுகுறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவரது பெற்றோர் இதுதொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் பேரில் ஆய்வாளர் வாசுகி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கார்த்தியை கைது செய்து விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம்தான் போக்சோ. நமது சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட அனைவருமே குழந்தைகள்தான். இப்படியிருக்கையில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணிடம் காதலைத் தெரிவிப்பது கூட குற்றமாகக் கருதப்படுகிறது. இப்படியிருக்கையில், காதல் என்கிற போர்வையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கார்த்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 1

Comments (0)

User