"என்ன பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்,..காசு சேர்த்துதான் கொ** பண்ணுவோம்” - சின்சியர் கும்பல் சிக்கியது எப்படி?

கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக செலவுக்கு பணம் சேர்க்க வழிப்பறி செய்த கும்பலின் செயல் அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.

Sep 19, 2024 - 13:42
Updated: 2 years ago
0 435
"என்ன பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்,..காசு சேர்த்துதான் கொ**   பண்ணுவோம்” - சின்சியர் கும்பல் சிக்கியது எப்படி?

மதுரை மாவட்டம், பெரியார் நகர் சாலையில் அவனியாபுரம் போலீசார் 
ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது  அவ்வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு நபர் கையில் வாளுடன் நின்றுகொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்ததில் வடக்குமாசி வீதி பகுதியை சேர்ந்த குமார் (எ) பைப்குமார் என்பது தெரியவந்தது.

பின் விசாரணையில், பைப் குமாருக்கும் பெரியார் நகரில் வசிக்கும்  மச்சசிவா தரப்புக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது.  

எனவே, மச்சசிவா தன்னைக் கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும், அதனால் முந்திக்கொண்டு தான் அவரைக் கொல்ல தயாரானதாகவும் குமார்  கூறினார்.

அதோடு, இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான செலவுகளுக்கு பணம் திரட்ட  முடிவு செய்துள்ளார் குமார். அவனியாபுரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(24), அருண்குமார்(24), ஆரோக்கிய விஜய்(20), ஆகாஷ்(19) , அசோக்குமார்(23), முகம்மது அசன் (24) ஆகியோருடன் சேர்ந்து  பொதுமக்களிடம் ஆயுதங்களிளைக் காட்டி வழிப்பறி செய்ய முடிவெடுத்து வாளை எடுத்து வந்ததாக கூறினார்.

இதனையடுத்து,   7 பேரையும் கைது செய்த அவனியாபுரம் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ஆறு பட்டாகத்தி , வாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

கொலை செய்ய திட்டம் போட்டு  அதற்கு செலவுக்கு பணம் சேர்க்க அதற்கென ஒரு திட்டம் போட்டு,.. இப்படி பிளான் பண்ணி வழிப்பறியில் இறங்கிய இந்த கும்பலின் இந்த செயல் அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User