மார்ச் 6-ல் பிறந்த நீங்கள் எப்படி: மென்மையானவர், நேர்மையானவர் தன்னலமிக்கவர்

மார்ச் 6-ம் தேதி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நீங்கள் தெய்வத்தின் மீது ஈடுபாடு கொண்ட உங்கள் குடும்பமானது மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

Mar 06, 2026 - 03:08
0 518
மார்ச் 6-ல் பிறந்த நீங்கள் எப்படி: மென்மையானவர், நேர்மையானவர் தன்னலமிக்கவர்
மார்ச் 6-ல் பிறந்த நீங்கள் எப்படி

நீங்கள் மென்மையானவர், உணர்ச்சிவசப்படுபவர் மற்றும் எப்போதும் எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர். உங்களுக்கு வளமான கற்பனைத் திறனும், சிறந்த ஏகாக்கிரக சக்தியும் (கவனக்குவிப்பு) உண்டு. இந்த ஆண்டில் உங்கள் கடந்த கால கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள். பாராட்டுகள், விருதுகள் மற்றும் அங்கீகாரம் உங்களைத் தேடி வரும். நீங்கள் அதிகாரம் மற்றும் தலைமைத்துவத்தைப் பெறக்கூடும். வெளிச்சம் உங்கள் மீது பிரகாசிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தன்னலமற்ற குணத்தை கொண்ட நீங்கள் எவ்வளவு விலை கொடுத்தாலும் குறுக்கு வழியில் செல்ல மாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை நேர்மையான வழியில் தான் சமாளிப்பீர்கள். கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த அளவு உதவியை செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். தன்னலமாக எதையும் யோசிக்க மாட்டீர்கள். 

பொறுமையான குணம் கொண்ட நீங்கள் நேர்மை தவறி நடப்பவர்களை பார்க்கும்போது பொங்கி எழுவீர்கள். அடுத்தவர்கள் உங்களை புகழவேண்டும் என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள். எதையும் சகித்துக் கொள்ளும் தன்மையை கொண்ட நீங்கள் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுவீர்கள்.

கலைத்துறை சார்ந்த, சினிமா, நடனம், சங்கீதம், இசை இது போன்ற தொழில் செய்பவர்களாக இருப்பீர்கள். அரசாங்க பதவியில் இருப்பவர்களாக இருந்தால் உயர்பதவியில் இருப்பீர்கள். பெண்களுக்கு அழகு படுத்துவது சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.

உங்களின் குடும்ப வாழ்க்கை சந்தோஷப்படும்படியாக தான் இருக்கும். உங்களுக்கு பிடித்தவர்களை நீங்கள் மணமுடித்திருப்பீர்கள். தெய்வத்தின் மீது ஈடுபாடு கொண்ட உங்கள் குடும்பமானது மகிழ்ச்சியுடன் இருக்கும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User