விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை -  மருத்துவமனை  அறிக்கை

அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம்

Nov 29, 2023 - 13:54
Updated: 3 years ago
0 272
விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை -  மருத்துவமனை  அறிக்கை

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என தனியார் மருத்துவமனை  நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக கடந்த வாரம் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் விஜயகாந்திற்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தேமுதிக மறுத்து விஜயகாந்த் உடல் நிலை சீராக உள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.அதில், ”விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளை தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை இன்று (நவ.29) அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், “விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User