Vijay: அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய விஜய்… 8 ஏக்கரில் சாய் பாபா கோயில் கட்டிய தளபதி!

தளபதி விஜய் சாய் பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் வைரலானது. அது விஜய் தனது அம்மாவுக்காக கட்டிக் கொடுத்த கோயில் என்ற உண்மை இப்போது தெரியவந்துள்ளது.

Apr 10, 2024 - 13:41
0 543
Vijay: அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய விஜய்… 8 ஏக்கரில் சாய் பாபா கோயில் கட்டிய தளபதி!

சென்னை: கோட் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றுள்ள விஜய், அங்கு ஸ்கேட்டிங் விளையாடிய வீடியோ வைரலானது. முன்னதாக அவர் சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்த போட்டோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியிருந்தது. கோட் படத்திற்காக ரஷ்யா சென்ற நிலையில் சாய் பாபா கோயிலில் விஜய் எப்போது சாமி தரிசனம் செய்தார், அது எங்கு உள்ளது என ரசிகர்கள் விவாதித்து வந்தனர். அதேபோல் ரஷ்யாவில் இருக்கும் விஜய்க்கும், சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்தபோது இருந்த கெட்டப்புக்கும் ரொம்பவே வித்தியாசம் இருந்தது.  

இந்நிலையில் விஜய் சென்றிருந்த சாய் பாபா கோயில் கொரட்டூரில் உள்ளது எனவும், அதனை கட்டியது அவர் தான் என்றும் தெரியவந்துள்ளது. சென்னை கொரட்டூரில் 8 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த சாய் பாபா கோயிலின் கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் 10ம் தேதி நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தனது அம்மா ஷோபாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக விஜய் இந்த கோயிலை கட்டிக் கொடுத்துள்ளாராம். மேலும், விஜய்யுடன் அவரது அம்மாவும் சாய் பாபா கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டுள்ளனர்.  

விஜய்யின் படங்கள் வெளியாகும் போது அதில் அரசியல் ரீதியான வசனங்கள் இடம்பெற்றால், ஜோசப் விஜய் என விமர்சனங்கள் எழுவது வழக்கம். அதாவது விஜய் கிறிஸ்த்துவ மதத்தைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தும் விதமாக, அவரை ஜோசப் விஜய் என சிலர் விமர்சித்தனர். இவைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் கட்சியையும் விஜய் அறிவித்துவிட்டார். விரைவில் முழுநேர அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுக்கவுள்ளார்.  

இதனால், விஜய் சாய் பாபா கோயில் கட்டியுள்ளது அரசியல் ரீதியாகவும் கவனம் ஈர்த்து வருகிறது. தனது அம்மாவின் ஆசைக்காக விஜய் சாய் பாபா கோயில் கட்டியிருந்தாலும், அதற்கு பல மத சாயங்கள் பூசுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த விமர்சனங்களுக்கும் விஜய் பதிலடி கொடுக்காமல் கடந்து செல்வது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User