மகன் கட்டிய கோயில்.. “அம்மா ஆசையை நிறைவேற்றிவிட்டார் விஜய்".. நெகிழ்ந்த ஷோபா!

தனது ஆசையை நிறைவேற்றும் விதமாக மகன் தனக்காக சாய்பாபா கோயிலை கட்டியிருப்பதாக விஜய்யின் தாயார் ஷோபா நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

Apr 11, 2024 - 18:24
0 382
மகன் கட்டிய கோயில்.. “அம்மா ஆசையை நிறைவேற்றிவிட்டார் விஜய்".. நெகிழ்ந்த ஷோபா!

வாரிசுகளால் அரசியல், அரசியலில் வாரிசுகள் என்று ஒருபக்கம் அரசியல் வட்டாரங்களுக்குள் பேச்சு வந்துகொண்டிருக்கும் நிலையில், அண்மையில் அரசியலில் குதித்திருக்கும் வாரிசான நடிகர் விஜய், தமது தாயின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கொரட்டூரில் சாய்பாபா கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். அண்மையில் சாய்பாபா கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்வதுபோன்ற புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. அதைத் துருவ ஆரம்பித்தபோதுதான் அவர் வழிப்பட்டுக் கொண்டிருந்த கோவிலைக் கட்டியிருப்பதே அவர்தான் என்றும், அதைக் கட்டியதற்கு ஒரு காரணம் உண்டு என்றும் தெரிய வந்தது. 

கொரட்டூரில் விஜய்க்கு சொந்தமாக நிலம் உள்ளது. அதில் 8 கிரவுண்டில் தான் சாய்பாபா கோயிலைக் கட்டியுள்ளார். என்னதான் விஜய் கிறிஸ்தவ மதத்தைப் பின்னணியாகக் கொண்டவராக இருந்தாலும், தன்னைக் குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவர் போலவே விஜய் காட்டிக் கொண்டதில்ல. ஆனால், விஜய்யின் தாயார் ஷோபா, தீவிர சாய்பாபா பக்தர் என்று கூறப்படுகிறது. அவர், தமது மகனிடம் ஒரு கோயிலைக் கட்ட வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே சொல்லி வந்துள்ளார். அதை மெய்யாக்கும் விதமாகவே விஜய் இந்தக் கோயிலைக் கட்டியிருக்கிறார். 

இந்த கோயிலின் கும்பாபிஷேகம் கூட கடந்த மாதம் 11-ம் தேதியே முடிவடைந்துவிட்டதாம். மேலும், அவ்வப்போது இரவு நேரங்களில் மன சாந்திக்காக விஜய் இந்தக் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுச் செல்வார் என்றும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே வாரிசு திரைப்படம் பெருமளவில் ஹிட் அடிக்கவில்லை என்று கலக்கத்தில் இருந்த விஜய், அதைச் சரி செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளார் என்கிறது சினிமா வட்டாரம். இதற்கிடையில் கோட் உட்பட அடுத்தடுத்து இரண்டு படங்களில் அவர் கமிட் ஆகியுள்ளார். ஆக திரைப்பணியில் பிஸியாக இருக்கும் விஜய், இதற்கு பிறகு நடிக்கவும் மாட்டார் என்று ஏற்கனவே கட்சி தொடங்கும் அறிவிப்பில் வெளியிட்டிருக்கிறார். இதெல்லாம் விஜய் ரசிகர்கள் மத்தியில் கலவையான உணர்ச்சிகளை உருவாக்கியிருக்கும் வேளையில், இந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது. 

சிவகாசி திரைப்படத்திலிருந்தே அம்மா செண்டிமெண்டிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய், தன்னுடைய அரசியல் பிரவேசத்தில், தாய்மார்கள் ஓட்டுகளையும் தன்வசம் ஆக்க வேண்டும் என்ற நினைப்புடன் கோயிலைக் கட்டியிருக்கிறாரா என்று அரசியல் வட்டாரம் கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், அவர்தான் குடும்பத்துடன் மனஸ்தாபத்தில் இருந்தாரே என்றும் கூறுகிறது ஒருவட்டாரம். 

அண்மையில், விஜய் இல்லாமல் எஸ்.ஏ.சந்திரசேகரும், ஷோபாவும் மட்டும் திருக்கடையூரில் எழுபதாம் கல்யாணம் செய்துகொண்ட விவகாரத்தை இதற்குப் பின்னணியாகக் காட்டுகின்றனர். விஜய்யின் அரசியல் பிரவேசம் எஸ்.ஏ.சி மற்றும் புஸ்ஸி ஆனந்தின் வற்புறுத்தலால் கூட நிகழ்ந்திருக்கலாம் என்று ஒருதரப்பு பேசுகிறது. இப்படி விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் பல்வேறு அனுமானங்களுக்கு இடம்கொடுக்கும்படியாக இருக்கையில், விஜய் கட்டிய கோயிலுக்கு வந்து பக்திப் பெருக்குடன் தரிசனம் செய்துள்ளார் அவரது தாயார் ஷோபா. 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோதுதான் தமது நீண்ட நாள் ஆசையை விஜய் நிறைவேற்றியிருக்கிறார் என்று நெகிழ்ந்துள்ளார். சான்றோன் எனக்கேட்டு மகிழ்ந்த தாய், தனது ஆசையை நிறைவேற்றிய மகனாகவும் விஜய்யை நினைத்துப் பூரித்துப் போய் இவ்வாறு பேசியுள்ளார். இதனால் அம்பத்தூர் அருகே உள்ள கொரட்டூர் சாய்பாபா கோயிலுக்கு படையெடுத்து வருகிறார்களாம் விஜய் ரசிகர்கள்... 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User