VidaaMuyarchi: விடாது துரத்தும் விடாமுயற்சி பஞ்சாயத்து… குழப்பத்தில் Good Bad Ugly டீம்!

விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் முடிவடையாத நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனின் Good Bad Ugle டீம் அஜித்துக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Apr 17, 2024 - 17:12
0 256
VidaaMuyarchi: விடாது துரத்தும் விடாமுயற்சி பஞ்சாயத்து… குழப்பத்தில் Good Bad Ugly டீம்!

சென்னை: அஜித்தின் 62வது படமாக உருவாகும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆரம்பம் முதல் இதுவரை அஜர்பைஜானில் மட்டுமே விடாமுயற்சி ஷூட்டிங் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய படக்குழு, மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை.  

ஒருகட்டத்தில் லைகாவில் பட்ஜெட் பிரச்சினை இருப்பதால், விடாமுயற்சி படமே ட்ராப் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இது உண்மை இல்லை என்பதை ரசிகர்களுக்கு புரிய வைப்பதற்காக அஜித்தின் கார் ஆக்ஸிடெண்ட் வீடியோவை வெளியிட்டது விடாமுயற்சி படக்குழு. கார் சேஷிங் ஷூட் செய்யும் போது அஜித் ட்ரைவ் செய்த ஹம்மர் ரக கார் அப்செட் ஆக, அதிலிருந்த ஆரவ்வும் விபத்தில் சிக்கினார்.  

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், விடாமுயற்சி படம் ட்ராப் ஆகவில்லை என படக்குழுவும் அறிவித்தது. ஆனாலும் இன்னும் படப்பிடிப்புத் தொடங்கவில்லை, அதேபோல் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் அல்லது டீசர் ஏதேனும் வருமா என்பதும் தெரியவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து குழப்பத்திலேயே இருந்தனர்.  

அதுமட்டும் இல்லாமல் மே மாதம் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் விடாமுயற்சியே இன்னும் விடாமல் இழுபறியாக சென்றுகொண்டிருக்க குட் பேட் அக்லி என்னாகுமே என அஜித் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில், தேர்தல் முடிந்ததும் ஏப்ரல் 25ம் தேதி விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜர்பைஜானில் நடைபெறும் இதில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்க மகிழ் திருமேனி பிளான் செய்துள்ளாராம். அதேபோல் மே மாதம் இறுதிக்குள் விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்துவிடும் என்றும், ஜூனில் குட் பேட் அக்லி தொடங்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User