Vettaiyan: வேட்டையன் படத்தில் ஃபஹத் பாசில் கேரக்டர் இதுதானா… அப்போ ரஜினிக்கு வில்லன் யாரு..?

தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது. இப்படத்தில் நடித்து வரும் ஃபஹத் பாசிலின் கேரக்டர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

Apr 10, 2024 - 10:57
Updated: 2 years ago
0 196
Vettaiyan: வேட்டையன் படத்தில் ஃபஹத் பாசில் கேரக்டர் இதுதானா… அப்போ ரஜினிக்கு வில்லன் யாரு..?

சென்னை: மலையாளத்தில் ஹீரோ, வில்லன் என வெரைட்டியாக நடித்து வரும் ஃபஹத் பாசிலுக்கு தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களிடமும் நல்ல ரீச் உள்ளது. தமிழில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் மூலம் என்ட்ரி கொடுத்த அவர், அடுத்தடுத்து சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என மாஸ் காட்டினார். முக்கியமாக மாமன்னன் படத்தில் ரத்னவேலுவாக மிரட்டிய ஃபஹத் பாசில் நடிப்பு கோலிவுட் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸாக அமைந்தது. இதனையடுத்து அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தில் இணைந்தார்.  

தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிக்கும் இந்தப் படம் அக்டோபரில் வெளியாகிறது. இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். அமிதாப் பச்சன் கேரக்டர் கேமியோ ரோல் என சொல்லப்படுவதால் ஃபஹத் பாசில் தான் வில்லனாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஹீரோ ரோல்களை விட வில்லன் கேரக்டர்களில் மரண மாஸ் காட்டுவார் ஃபஹத் பாசில். இதனால் ரஜினிக்கு எதிரக ஃபஹத் வில்லனாக எப்படி மிரட்டுவார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.  

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் வேட்டையன் படத்தில் தனது கேரக்டர் பற்றி மனம் திறந்துள்ளார். அதாவது விக்ரம் படத்தில் எனது கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஹீரோ கமல்ஹாசனை விட எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் வேட்டையன் படத்தில் இயக்குநர் தசெ  ஞானவேல் எனக்கு கொடுத்தது காமெடி கேரக்டர் தான். அவர் சொன்ன போது ரஜினி கேரக்டரில் காமெடி கேரக்டர் எனக்கு செட் ஆகுமா என யோசித்தேன். ஆனால் எனது ரோல் பற்றி முழுமையாக கூறியதும் தான் வேட்டையனில் நடிக்க ஓக்கே சொன்னேன் என ஃபஹத் பாசில் தெரிவித்துள்ளார்.

இதனால் வேட்டையனில் ரஜினிக்கு யார் வில்லன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் ராணா தான் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய அப்டேட் வேட்டையன் டீசர் அல்லது ட்ரெய்லர் வெளியாகும் போது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User