நாடாளுமன்றத் தேர்தல்: தஞ்சை வந்த வி.வி.பேட் பேப்பர் ரோல்

ஒவ்வொரு பெட்டியிலும் 20 ரோல்கள் என 4320 பேப்பர் ரோல்கள் இருந்தது.

Nov 21, 2023 - 15:01
Updated: 3 years ago
0 681
நாடாளுமன்றத் தேர்தல்: தஞ்சை வந்த வி.வி.பேட் பேப்பர் ரோல்

பெங்களூரில் இருந்து தஞ்சைக்கு வந்த வி.வி.பேட் கருவி பேப்பர் ரோல் அடங்கிய பெட்டிகள் அறையில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக மின்னனு வாக்கு பதிவு எந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு  முன்பு வந்து இறங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று வி.வி.பேட் கருவியில் பொருத்தப்படும் பேப்பர் ரோல் பெட்டிகள் பெங்களூரில் இருந்து லாரியில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியது.இந்த பேப்பர் ரோலானது வி.வி.பேட் எந்திரத்தில் பொருத்தப்பட்டு யாருக்கு  ஓட்டளித்தோம் என்பதை காண்பிக்கும் ஒப்புகை சீட்டாகும். 

மொத்தம் 21 பெட்டிகளில்  பேப்பர் ரோல் வந்தது. ஒவ்வொரு பெட்டியிலும் 20 ரோல்கள் என 4320 பேப்பர் ரோல்கள் இருந்தது.இவைகள் லாரியில் இருந்து இறக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User