வ.உ.சி இழுத்த செக்கு அவர் வாழ்ந்த வீட்டிற்கு வருமா..? தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு...

வ.உ.சிதம்பரனார் நினைவாக கோவை சிறையில் உள்ள செக்கை, அவர் வாழ்ந்த தூத்துக்குடி இல்லத்திற்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Mar 13, 2024 - 17:14
Updated: 2 years ago
0 173
வ.உ.சி இழுத்த செக்கு அவர் வாழ்ந்த வீட்டிற்கு வருமா..? தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு...

வ.உ.சிதம்பரனார் நினைவாக கோவை சிறையில் உள்ள செக்கை, அவர் வாழ்ந்த தூத்துக்குடி இல்லத்திற்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குமரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் சுதந்திரத்திற்காக அதிகம் பாடுபட்டவர். இந்தியாவின் கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமையும் இவரையே சேரும்.

இந்திய விடுதலைக்காக சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி தீவிரமாக செயல்பட்டதால் பலமுறை சிறை சென்றுள்ளார். கோவை மத்திய சிறையில் வ.உ.சி அடைக்கப்பட்ட போது செக்கு இழுக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது. அவர் இழுத்த செக்கு இன்று வரை கோவை மத்திய சிறையில் உள்ளது.
 
நாட்டிற்காக அவர் செய்த தியாகத்தை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக, கோவை சிறையில் உள்ள செக்கினை தூத்துக்குடியில் இருக்கும் அவர் வாழ்ந்த வீட்டிற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அடங்கிய அமர்வு, இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User