நெல்லூர் அருகே பேருந்து மீது லாரி மோதி விபத்து : 8 பேர் பலி

நெல்லூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்ததோடு, 15 பேர் படுகாயமடைந்தனர்.

Feb 10, 2024 - 07:35
Updated: 2 years ago
0 226
நெல்லூர் அருகே பேருந்து மீது லாரி மோதி விபத்து : 8 பேர் பலி

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி அருகே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட லாரி மீது மற்றொரு லாரி மோதி முதலில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருந்து தப்புவதற்காக லாரியை ஓட்டுநர் வலது புறமாக திருப்ப முயன்றபோது எதிர்த்திசையில் சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதியதாகத் தெரிகிறது. இந்த கோர விபத்தில் லாரியும் பேருந்தும் கடுமையாக சேதமடைந்தநிலையில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிந்தனர். 

மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில், விபத்து குறித்த தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து, லாரி ஆகிய இரண்டையும் கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User