குமரியில் புலி தாக்கி 2 பேர் படுகாயம்... முள்ளம்பன்றி தாக்கியதில் புலி பலி..

Apr 24, 2024 - 13:25
Updated: 2 years ago
0 381
குமரியில் புலி தாக்கி 2 பேர் படுகாயம்... முள்ளம்பன்றி தாக்கியதில் புலி பலி..

கன்னியாகுமரி அருகே 2 பேரை கொடூரமாக தாக்கிய புலி, முள்ளம்பன்றி தாக்கியதில் உயிரிழந்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையை அடுத்த ஆண்டிபொற்றை பகுதியை சேர்ந்தவர் ஜெயன். இவர் இன்று (ஏப்ரல் 24) காலை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். சேனங்கரை பகுதியில் சென்றபோது புலி ஒன்று திடீரென ஜெயனின் வாகனம் மீது பாய்ந்து அவரைக் கொடூரமாக தாக்கியுள்ளது. உயிர் பயத்தில் ஜெயன் கூச்சலிட்டதும் அங்கிருந்து தப்பியோடிய புலி,  ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பூதலிங்கம் என்பவரையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. உடனடியாக பொதுமக்கள் ஓடோடி வந்த நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்ற புலி அருகில் உள்ள தோட்டத்தில் விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. 

இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது, புலியின் உடலில் முள்ளம்பன்றியின் முட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. முள்ளம்பன்றி தாக்கியதால் காயமடைந்த புலி,  ஆக்ரோஷத்தில் 2 பேரையும் தாக்கிவிட்டு பிறகு உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து புலி தாக்கியதில் காயமடைந்த இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User