Thug Life: துல்கர் சல்மான் வரிசையில் ஜெயம் ரவி..? அடுத்த விக்கெட்டை இழக்கும் தக் லைஃப் டீம்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mar 23, 2024 - 16:09
0 227
Thug Life: துல்கர் சல்மான் வரிசையில் ஜெயம் ரவி..? அடுத்த விக்கெட்டை இழக்கும் தக் லைஃப் டீம்!

கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் தக் லைஃப்-ம் ஒன்று. நாயகனுக்குப் பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள தக் லைஃப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி தற்போது செர்பியாவில் நடைபெற்றுவருகிறது. தேர்தல் பணிகளில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், விரைவில் செர்பியாவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.  

அதற்கு முன்பாக ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் காட்சிகளை ஷூட் செய்துவிட மணிரத்னம் பிளான் செய்திருந்தார். இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் விலகிவிட்டதாக சொல்லப்பட்டது. அப்போது சூர்யா 43 படத்திலும் கமிட்டாகியிருந்தார் துல்கர். ஆனால், சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகவிருந்த சூர்யா 43 படமும் திடீரென ட்ராப் ஆகிவிட்டது.  

இந்நிலையில், தற்போது ஜெயம் ரவியும் தக் லைஃப் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்ற செய்தி வைரலாகி வருகிறது. ஆனால், இதுபற்றி அபிஸியலாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் துல்கர் சல்மானை தொடர்ந்து ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தான் தக் லைஃப் படத்தில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. துல்கர் சல்மானுக்குப் பதிலாக சிம்புவை நடிக்க வைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போது ஜெயம் ரவிக்கு மாற்றாக யார் களமிறங்கவுள்ளார் என்பதும் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. 

தக் லைஃப் ஷூட்டிங் தொடங்கிய வேகத்தில் இந்தப் படத்தில் இருந்து ஒவ்வொருவராக விலகுவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தக் லைஃப் படத்தில் கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், கெளதம் கார்த்திக், நாசர், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி ஆகியோர் கமிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User