“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் கதை இதுதான்- இயக்குனர் ராம் பேச்சு

மானுடத்தின் காதலைப் பற்றியும், இந்த உலகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே இத்திரைப்படம் பேசுகிறது.

Feb 15, 2024 - 10:15
Updated: 2 years ago
0 1.9
“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் கதை இதுதான்- இயக்குனர் ராம் பேச்சு

'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் மானுடத்தின் காதலைப் பற்றியும், இந்த உலகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறது என இயக்குனர் ராம் கூறியிருக்கிறார்.

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம் ரவி, ஏழு கடல் ஏழு மலை படத்தின் இயக்குநர் ராம், நடிகைகள் அஞ்சலி, அனிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. பின்னர் பேசிய இயக்குனர் ராம், காதல் என்பது பாலின வேற்றுமை, சாதி, மதத்தைத் தாண்டியது எனவும் காதல் என்கிற பிரபஞ்ச சக்தி தான் இந்த உலகத்தை தன் கையில் பிடித்து வைத்திருக்கிறது எனவும் கூறினார். 

ஏழு கடல் ஏழு மலை படம் உருவாகக் காரணம் கடந்த 2019-ல் கொரோனா காலத்தில் மனித குளம் நம்பிக்கையூட்டும் வரலாறு என்ற புத்தகத்தைப் படித்தேன்.அதில் ஒரு பகுதியில் இரண்டாம் உலகப் போர் நடைபெறுகிறது. மிகப்பெரிய அழிவுகள் நடந்த காலம். அப்போது ராணுவ கமாண்டர் ஒருவர் தனது வீரர்களுக்கு எதிரே உள்ள மனிதர்களைச் சுட  உத்தரவிடுகிறார். 100 பேர் இருந்தாலும் 10 பேர் மட்டுமே சுடுவார்கள்.மற்ற யாவரும் சுட மாட்டார்கள் நடிப்பார்கள். காரணம் இயல்பாகவே மனிதர்கள் மற்றொரு மனிதனைச் சுட மாட்டார்கள்.மனிதனால் மற்றொருவரை வெருக்க,  துன்புறுத்த முடியாது. மனிதன் தன்னுடைய எல்லாம் வேறுபாட்டையும் தாண்டி கரம் கோர்த்து நிற்பான் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்த கதை என்றார். 

மேலும் நீங்களும் அந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது,மனதில் மகிழ்ச்சி தரும் என்றார்.நீங்கள் எவ்வளவு அன்பாளர்கள் மற்றும் உங்களிடம் எவ்வளவு காதல் உள்ளது என்பது புரியும்.அது உங்களை வேறொரு மனிதனாக மாற்றும்.  உற்சாகம் பெற்றவனாக மேலும் இசை, கவிதை, நடனம் ஆகியவற்றை ரசிக்கத் தூண்டும் எனக் கூறினார். 

அந்த புத்தகத்தின் பாதிப்பு, இந்த தத்துவத்தின் அடிப்படையில் உருவானதே, ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் எனத் தெரிவித்தார். மேலும், எனது முந்தைய நான்கு படங்கள் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்,  ஐந்தாவது படமான ஏழு கடல் ஏழு மலை நிச்சயமாகப் பிடிக்கும் எனவும் இந்த படம் முழுக்க முழுக்க பேசுவது "மானுடத்தின் காதலைப் பற்றியும், இந்த உலகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறது" எனவும் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User