This Week OTT Release: மஞ்சும்மல் பாய்ஸ், ஹாட் ஸ்பாட்… இந்த வாரம் ஓடிடியில் செம்ம ட்ரீட் இருக்கு!

இந்த வாரம் மஞ்சும்மல் பாய்ஸ், சைத்தான், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட படங்கள், வெப் சீரிஸ்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.

May 02, 2024 - 17:00
0 353
This Week OTT Release: மஞ்சும்மல் பாய்ஸ், ஹாட் ஸ்பாட்… இந்த வாரம் ஓடிடியில் செம்ம ட்ரீட் இருக்கு!

சென்னை: ஓடிடி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. சிதம்பரம் இயக்கத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, தீபக் பரம்போல், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் ரிலீஸானது. மலையாளத்தில் 200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ், இந்த வாரம் முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்தப் படம் தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழில் ஹாட் ஸ்பாட் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. விக்னேஷ் கார்த்திக் இயக்கிய இந்தப் படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கெளரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர். ஆண், பெண் உறவுச் சிக்கலை பின்னணியாக வைத்து அடல்ட் கன்டென்ட் படமாக உருவாகியுள்ளது ஹாட் ஸ்பாட். திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற ஹாட் ஸ்பாட், இந்த வாரம் முதல் டென்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல், ஹன்ஸிகா, சிம்ரன் நடித்துள்ள கார்டியன் திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகிறது. 

இந்தியில் அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் நடித்த சைத்தான் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. விகாஸ் பால் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தியேட்டரில் கலவையான விமர்சனம் கிடைத்தது. இதனால் நெட்பிளிக்ஸ் ரசிகர்களிடம் சைத்தான் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேபோல், ஹீராமண்டி என்ற இந்தி வெப் சீரிஸ் இந்த வாரம் முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. இந்த சீரிஸும் ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் சித்தார்த் ராய் என்ற திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் போக்கா மூவி சாய்னா ப்ளே தளத்தில் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. அமேசான் ப்ரைமில் The Idea Of You திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. 40 வயது பெண்ணுடன் 24 வயது இளைஞனுக்கு வரும் காதல் என, ரொமாண்டிக் காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. அதேபோல் clarkson's farm season 3 வெப் சீரிஸும் அமேசான் ப்ரைமில் ரிலீஸாகிறது. நெட்பிளிக்ஸில் Unfrosted திரைப்படமும், The Atypical Family என்ற கொரியன் வெப் சீரிஸும் வெளியாகின்றன. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User