திருப்பரங்குன்றம் தீபம் பழைய நடைமுறை பின்பற்றப்படும்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 2 ஆண்டுக்கு முன் பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும் எனவும் அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது என அமைச்சர் நிர்மல்குமார் உறுதி அளித்துள்ளார். 

Jun 06, 2026 - 07:38
0 346
திருப்பரங்குன்றம் தீபம் பழைய நடைமுறை பின்பற்றப்படும்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
திருப்பரங்குன்றம் தீபம் அமைச்சர் உறுதி

மதுரையில் நிருபர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் நிர்மல்குமார்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ரொம்ப தெளிவாக சொல்லியாச்சு, மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 2 ஆண்டுக்கு முன் பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும் இதில் எந்த மாற்றமும் செய்யப்படாது. 

இங்கிருக்கும் மக்கள் விருப்புமும் இது தான். மக்களின் விருப்பத்திற்கு ஏற்றால் போலதான்  அரசின் கொள்கையும் இருக்கும்.  இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இதில் யாரும் எந்த மதவாத சக்தியும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100 சதவீதம் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.  செய்தியாளர்கள் யாரையும் பார்த்து நாங்கள்  பயப்படவில்லை; திமுகவை பார்த்து கூட முதல்வர் ஒரு நிமிடம் கூட பயப்படவில்லை.

இது எல்லாம் யாருக்கும் பெரிய விஷயமே கிடையாது. செய்தியாளர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று Benchmark Fix பண்ணாதீங்க. 7, 8 ஆண்டுகளாக சிலர் அவர்களது சொந்த விளம்பரத்திற்காக அவர்களுடைய இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? பிரிண்ட் மீடியாதான் இருந்தது. 

அறிக்கை மட்டும் வழங்கப்படும். செய்தியாளர்களை சந்தித்துதான் அரசு நடத்த வேண்டும் என்றெல்லாம் கிடையாது.  எப்போது தேவையோ அப்போது முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார்.தொடர்ச்சியாக மக்களை சந்திக்கிறார். மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார். மக்களுக்குத் தேவையானதை அவர் தெளிவுபடுத்துவார். அரசு சார்பாக, கட்சி சார்பாக நாங்கள் செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User