பிரேக்டவுனாகி நின்ற கார் - பின்னால் வந்த லாரி, கார் அடுத்தடுத்து மோதி விபத்து!

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை

Feb 26, 2024 - 12:44
0 191
பிரேக்டவுனாகி நின்ற கார் - பின்னால் வந்த லாரி, கார் அடுத்தடுத்து மோதி விபத்து!

போரூர் பைபாஸ் சாலையில் பழுதடைந்த எலக்ட்ரிக் கார் மீது பின்னால் வந்த லாரி, கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

சென்னை, மதுரவாயல் நோக்கி போரூர் பைபாஸ் அருகே சென்று கொண்டிருந்த எலக்ட்ரிக் கார் ஒன்று பழுதாகி திடீரென சாலையின் நடுவே நின்றது. அப்போது,  காருக்கு பின்னால் வந்த லாரி காரின் மீது மோதியது, அந்த லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு காரும் லாரியின் பின்பக்கத்தில் பலமாக மோதியது. இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

அந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பயணித்த நிலையில், பெண் ஒருவருக்குத் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, 3 பேரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சென்ற மதுரவாயல் காவல்துறையினர், விபத்துக்குள்ளான லாரி மற்றும் இரண்டு கார்களையும் சாலையோரம் அப்புறப்படுத்தினர்.  மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User