ஆட்சி அமைக்க ஆளுநரிடம் தவெக உரிமை கோரியது: முதல்வராக விஜய் நாளை பதவியேற்பு

தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் தவெக உரிமை கோரியுள்ளது. இதை தொடர்ந்து நாளை முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

May 06, 2026 - 10:47
0 404
ஆட்சி அமைக்க ஆளுநரிடம் தவெக உரிமை கோரியது: முதல்வராக விஜய் நாளை பதவியேற்பு
முதல்வராக விஜய் நாளை பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து புதிய கூட்டணியை அறிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்தனர். தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரின் ஆதரவுக் கடிதத்தையும் விஜய்யிடம் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய். ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்ததும், விரைந்து பெருபான்மை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் விஜய்க்கு கெடுவித்துள்ளார். இதை தொடர்ந்து விஜய் நாளை முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது. தமிழக அரசு தரப்பில் பதவியேற்பு விழா முன்னேற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர். இதில், பதவியேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User