Thalapathy 69: விஜய்யின் தளபதி 69 இயக்குநர் ரேஸில் இருந்து வெளியேறிய அடுத்த பிரபலம்!

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகவுள்ள தளபதி 69 இயக்குநர் பற்றி சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன.

Apr 24, 2024 - 16:04
0 296
Thalapathy 69: விஜய்யின் தளபதி 69 இயக்குநர் ரேஸில் இருந்து வெளியேறிய அடுத்த பிரபலம்!

சென்னை: மாஸ் ஹீரோ விஜய்யின் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோட் ஃபர்ஸ்ட் சிங்கிளையும் படக்குழு ரிலீஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கோட் பட அப்டேட்கள் ஒருபக்கம் பட்டையை கிளப்ப, இன்னொரு பக்கம் விஜய்யின் தளபதி 69 இயக்குநர் யார் என்ற விவாதம் சூடு பிடித்துள்ளது.    

விரைவில் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கவுள்ள விஜய், கடைசியாக தளபதி 69 படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்படத்தின் இயக்குநர் யார் என்பதோடு கதை என்னவென்பதை தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல் விஜய் அரசியலில் பயணிக்கவுள்ளதால், அவரது கடைசிப் படம் பொலிட்டிக்கல் ஜானரில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வெற்றிமாறன் தான் விஜய்யின் தளபதி 69 படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.   

வெற்றிமாறனுடன் கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, H வினோத், நெல்சன் ஆகியோரின் பெயர்களும் தளபதி 69 இயக்குநர் லிஸ்ட்டில் இடம்பெற்றன. இவர்களில் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவின் 44வது படத்தை இயக்க கமிட்டாகிவிட்டார். அட்லீ, அல்லு அர்ஜுனுடன் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இறுதியாக வெற்றிமாறன் அல்லது ஹெச் வினோத் இருவரில் ஒருவர் தான் தளபதி 69 இயக்குநராக இருக்கலாம் என சொல்லப்பட்டது. 

ஆனால், தளபதி 69 படத்தை நான் இயக்க வாய்ப்பில்லை என வெற்றிமாறன் ஓபனாக தெரிவித்துவிட்டார். சமீபத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், விஜய்யுடன் இணைய வேண்டும் என்பது ஆசை தான், சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்காக கதை கூறினேன். ஆனால் அது இப்போது உருவாக சான்ஸ் கிடையாது என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து தளபதி 69 இயக்குநர் ரேஸில் இருந்து வெற்றிமாறனும் வெளியேற ஹெச் வினோத்துக்கு அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User