தமிழக பட்ஜெட் ஜூன் 3-வது வாரம் தாக்கல் ?: நாளை அமைச்சரவை கூட்டம் 

தமிழக பட்ஜெட் ஜூன் 3-வது வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான நாளை நடக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது. 

Jun 04, 2026 - 06:05
0 313
தமிழக பட்ஜெட் ஜூன் 3-வது வாரம் தாக்கல் ?: நாளை அமைச்சரவை கூட்டம் 
தமிழக பட்ஜெட் ஜூன் 3-வது வாரம் தாக்கல் ?

2026-2027ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு காரணம் ஏப்ரல் 23-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்ததால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே திமுக அரசு பிப்ரவரி 17-ம் தேதி தாக்கல் செய்து இருந்தது. இதனால் புதிய அரசு அமைந்த பிறகு 2026-2027 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். 

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்து, முதல்வராக விஜய் பொறுப்பேற்று கொண்டார். தவெக ஆட்சி பொறுப்பேற்று 1 மாதங்கள் நெருங்கும் நிலையில், நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள மரியம் வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் உள்ளார். பல தரப்பினரிடமும் ஆலோசனை பெற்று பட்ஜெட் தயாரிக்கும் பணியில் அமைச்சர் மரியம் வில்சன் ஈடுபட்டுள்ளார். 

இந்த நிலையில் தவெக ஆட்சி பொறுப்பேற்று முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் கூடும் அமைச்சரவை கூட்டத்தில்  தமிழக பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஒப்புதல் பெறவுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்புதலுக்கு பிறகு ஜூன் 3-வது வாரத்தில் 15-ம் தேதி பிறகு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User