தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி? பிப் 3-வது வாரத்தில் அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டம் 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை பிப்ரவரி 3 அல்லது கடைசி வாரத்தில் அறிவிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Feb 05, 2026 - 09:05
0 258
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி? பிப் 3-வது வாரத்தில் அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டம் 
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி?

திமுக அரசின் பதவிகாலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. அதற்கு தேர்தலை நடத்திய புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில் திமுக, அதிமுக, தவெக என அனைத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வ்ருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தேர்வு என கட்சிகள் பிஸியாக உள்ளன. 

தமிழகத்தில் சட்டபேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் வருகிற பிப். 11 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார்.  தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் கடந்த நவ. 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜன. 30 வரை நடைபெற்றது.வருகிற பிப். 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. 

பிப்ரவரி  3 அல்லது 4 வது வார இறுதியில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் வருகிற பிப். 11 ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார்.

எஸ்ஐஆர் இறுதிப் பணிகள், தேர்தல் முன்னேற்பாடுகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யவும் தேர்தல் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவும் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User