டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை அலற விட்ட ஜிம்பாப்வே, 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி 

டி20 உலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே அணி 23 வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. 

Feb 13, 2026 - 10:03
0 397
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை அலற விட்ட ஜிம்பாப்வே, 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி 
ஆஸ்திரேலியாவை அலற விட்ட ஜிம்பாப்வே

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கொலம்போவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ரன்களை (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்தார்.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் இங்கிலிஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் இங்கிலிஸ் 8 ரன்னிலும் அடுத்து வந்த கேமரூன் கிரீன், டிம் டேவிட் டக் அவுட் ஆகினர். அதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து மேக்ஸ்வெல்- மேட் ரென்ஷா ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய மேக்ஸ்வெல் 32 பந்தில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 6, பென் த்வார்ஷுயிஸ் 6 என ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய மேட் ரென்ஷா அரை சதம் எடுத்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து போராடிய அவர் 65 ரன்னில் ஆட்டமிழந்தார்

இதனால் ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User