பாரிவேந்தருக்கு பெருகும் மக்கள் ஆதரவு... சீரியல் நடிகர்களும் களமிறங்கி பிரசாரம்...

பெரம்பலூர் தொகுதியில் ஐஜேக கட்சி சார்பில் போட்டியிடும் பாரிவேந்தரை ஆதரித்து அவரது மகன் ரவிபச்சமுத்து, பெரம்பலூரில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதேவேளையில், முசிறியின் பல்வேறு இடங்களில் பாரிவேந்தரும் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

Apr 05, 2024 - 05:15
Updated: 2 years ago
0 509
பாரிவேந்தருக்கு பெருகும் மக்கள் ஆதரவு... சீரியல் நடிகர்களும் களமிறங்கி பிரசாரம்...

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் சிட்டிங் எம்பியாக இருக்கக்கூடிய ஐஜேக தலைவர் பாரிவேந்தர் மீண்டும், அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில், திமுக சார்பாக கே.என்.நேருவின் மகன் அருண் நேருவும் போட்டியிடுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

பெரம்பலூர் தொகுதியில் கடந்த சில நாட்களாக பாரிவேந்தர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட முசிறியின் கைக்காட்டி, தி பேட்டை, முசிறி பேருந்து நிலையம், செவந்திலிங்கபுரம், வெல்லூர் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு அங்குள்ள மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர். 

அப்போது மக்கள் முன் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பேசிய பாரிவேந்தர், அரசு கொடுத்த தொகுதி நிதி ரூ.17 கோடியை வீணாக்காமல் மக்களுக்கு செலவு செய்ததாகவும், மாணவர்கள் படித்து முன்னேறுவதற்காக, தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் யாரும் செய்யாத வகையில் சொந்த நிதியில் இருந்து ரூ.118 கோடியை செலவு செய்திருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். 

இதேவேளையில் பெரம்பலூரின் பல பகுதிகளில் பாரிவேந்தரின் மகன், ரவி பச்சமுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் பிரபல சீரியல் நடிகர், நடிகைகள் திறந்தவெளி வாகனத்தில் சென்று மக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்த உள்ளூர் மக்கள் அவர்களுடன் கைக்குலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User