பில்கேட்ஸ், சுந்தர் பிச்சை, ரிஹானா! - நீளும் அம்பானி மகன் வெட்டிங் நிகழ்ச்சியின் கெஸ்ட் லிஸ்ட்...

Feb 25, 2024 - 13:29
0 392
பில்கேட்ஸ், சுந்தர் பிச்சை, ரிஹானா! - நீளும் அம்பானி மகன் வெட்டிங் நிகழ்ச்சியின் கெஸ்ட் லிஸ்ட்...

ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் உலகப் பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியில் எரிசக்தி வணிகத்தை நிர்வகித்து வருகிறார் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் நீத்தா அம்பானியுடன் இணைந்து ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸையும் வழிநடத்தி வருகிறார். இவருக்கும், பிரபல தொழிலதிபரான வீரேன் மெர்ச்செண்டின் மகள் ராதிக மெர்ச்செண்ட்டுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் நாத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் வைத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும் வரும் ஜூன் மாதம் இவர்களது திருமணம் மும்பையில் நிகழவிருக்கிறது.

இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பு ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி ஒன்றை அம்பானி குடும்பம் ஏற்பாடு செய்துள்ளது. அதில் உலக தொழிலதிபர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மார்ச்சில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், உலக பணக்காரர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், முக்கிய பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்வில், உலகப்புகழ் பாடகி ரிஹானா, மைக்ரோசாப்ட் நிறுவனர் bill Gates, மெட்டா சிஇஓ Mark Zuckerberg, பிளாக்ராக் சிஇஓ லாரி ஃபிங்க், பிளாக்ஸ்டோன் தலைவர் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, டிஸ்னி சிஇஓ பாப் இகர், டிரம்ப்பின் மகள் இவாங்கா, அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண், பூட்டான் அரச குடும்பம் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்க, பங்கேற்பாளர்களின் பட்டியலே இணையத்தில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User