Star Box Office: அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ஸ்டார்… பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் வின்னரா ரன்னரா..?

கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

May 11, 2024 - 12:42
0 621
Star Box Office: அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ஸ்டார்… பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் வின்னரா ரன்னரா..?

சென்னை: கோலிவுட்டின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் கவின். டாடா வெற்றிக்குப் பின்னர் கவின் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இளன் இயக்கத்தில் கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் நேற்று ரிலீஸானது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு மிகப் பெரிய ஹைப் காணப்பட்டது. ஸ்டார் ட்ரெய்லர் மட்டுமின்றி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருந்தது.

இதனால் ஸ்டார் படத்திற்கான முதல் நாள் ஆன்லைன் புக்கிங் தாறுமாறாக இருந்தது. அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே தமிழ்நாட்டில் 1.5 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது ஸ்டார். அதேபோல் நேற்று படம் வெளியான போது முதல் நாள் ஓபனிங் சிறப்பாக அமைந்தது. திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற கவினுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்ததோடு, அவரது நடிப்பையும் பாராட்டியிருந்தனர். ஸ்டார் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும், நடிப்பில் கவின் ஒன்மேன் ஆர்மியாக ஸ்கோர் செய்திருந்தார். 

முதல் நாளை தொடர்ந்து இன்றும் ஸ்டார் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. ஆனால், முதல் நாளில் ஸ்டார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் கொஞ்சம் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. அதன்படி இந்தப் படம் நேற்று 2.75 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. 5 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 கோடிக்கும் குறைவாகவே கலெக்‌ஷன் செய்துள்ளது ஸ்டார். கடந்த வாரம் ரிலீஸான அரண்மனை 4 முதல் நாளில் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. ஆனால், கவினின் ஸ்டார் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தடுமாற்றம் கண்டுள்ளது.

அதேநேரம் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் ஸ்டார் படத்தின் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக 50 கோடி வசூல் லிஸ்ட்டில் ஸ்டார் இணையுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கவின் நடிப்பில் ஸ்டார் படத்துக்கு முன்பாக வெளியான டாடா 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User