"DMK - BJP தான் கள்ளக்கூட்டணி" - நாங்களா கள்ளக்கூட்டணி? - இபிஎஸ்

ஆட்சி அதிகாரத்திற்காகவே காங்கிரஸ் கட்சியுடன் ஸ்டாலின் கூட்டணி

Mar 26, 2024 - 20:38
0 187
"DMK - BJP தான் கள்ளக்கூட்டணி" - நாங்களா கள்ளக்கூட்டணி? - இபிஎஸ்

திமுகதான்  பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

 

தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், கடந்த 5 ஆண்டுகளாக திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதையே வழக்கமாக வைத்துள்ளதாகவும், எந்த மக்கள் பிரச்னைக்கும் அவர்கள் வாய்திறக்கவே இல்லை எனவும் குற்றம்சாட்டினார். 

தூத்துக்குடியில் கனமழை வெள்ளம் ஏற்பட்ட போது, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்காமல், டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு சென்றவர் தான் ஸ்டாலின் என்றும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களின் குறைகளை தீர்க்க களத்தில் இறங்கியது அதிமுக தான் எனவும் கூறினார்.

 

எமர்ஜென்சி சமயத்தில் தான் கைது செய்யப்பட்டதாக கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்திற்காகவே தன்னை கைது செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து இரட்டை வேடம் போடுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது என்றும், திமுகவின் நிர்வாகியே வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக ஜாபர் சாதிக்குடன் உதயநிதி நிற்கும் புகைப்படத்தை காட்டி குற்றம்சாட்டினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User