எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அரசு பள்ளி மாணவிகள்

மாணவிகள் இருவருக்கும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Jan 06, 2024 - 14:42
Updated: 3 years ago
0 192
எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அரசு பள்ளி மாணவிகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு பள்ளி மாணவிகள் உணவில் எலி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மொளச்சூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு ஏராளமான பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர் கடையில் எலி மருந்து வாங்கி வந்து மதிய உணவு இடைவேளையில் உணவில் கலந்து உட்கொண்டுள்ளனர். 

உணவு சாப்பிட்ட சில மணி நேரத்தில் இரண்டு மாணவிகளுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.சோர்வடைந்து காணப்பட்ட இரண்டு மாணவிகளிடம் சக மாணவிகள் கேட்டதற்கு மதிய உணவு அருந்தியபோது உணவில் எலி மருந்து கலந்து உட்கொண்டதாக தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட மாணவிகள் இருவருக்கும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பள்ளியில் ஆசிரியர்கள் யாரேனும் மாணவிகளை கண்டித்தார்களா,வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு எலி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றார்களா என்ற கோணத்தில் சுங்குவார்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User