நகைப்பிரியர்களுக்கு சற்றே ஆறுதல் செய்தி: தங்கம் சவரனுக்கு ரூ.960 குறைவு

வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்ம் விலை சற்றே குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.960 குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்றே ஆறுதல் செய்தியாக அமைந்துள்ளது. 

Feb 16, 2026 - 04:22
Updated: 5 months ago
0 280
நகைப்பிரியர்களுக்கு சற்றே ஆறுதல் செய்தி: தங்கம் சவரனுக்கு ரூ.960 குறைவு
தங்கம் சவரனுக்கு ரூ.960 குறைவு

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், சவரன் விலை ஆயிரக்கணக்கில் உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்திய நிலையில், இன்றைய தினம் தங்கம் விலை குறைந்துள்ளது. 

கடந்த சனிக்கிழமை  சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,200 விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14.400 விற்பனை செய்யப்பட்டது. 

கடந்த மூன்று தினங்களாக ஒரு கிராம் வெள்ளி ரூ. 300-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3 லட்சம் என்ற நிலையிலேயே மாற்றமின்றி விற்பனை ஆகி வந்தது. இன்றைய தினம் வெள்ளியும் கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.280 விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000 விற்பனை செய்யப்பட்டது. 

வார தொடக்க நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,520 -க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,440 விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் ரூ. 15 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.15 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User