Sikandar: சொன்னதை செய்து காட்டிய AR முருகதாஸ்... சல்மான் கானின் சிக்கந்தர் கிளிம்ப்ஸ் லோடிங்!

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங் மும்பையில் தொடங்கியது.

Jun 19, 2024 - 18:20
0 315
Sikandar: சொன்னதை செய்து காட்டிய AR முருகதாஸ்... சல்மான் கானின் சிக்கந்தர் கிளிம்ப்ஸ் லோடிங்!

மும்பை: தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸ், ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். விஜய்யின் 65வது படத்தின் இயக்குநராக ஏஆர் முருகதாஸ் தான் முதலில் கமிட்டானார். ஆனால், கடைசி நேரத்தில் இக்கூட்டணி பிரிய, ஏஆர் முருகதாஸுக்கு பதிலாக நெல்சன் உள்ளே வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கடுப்பான ஏஆர் முருகதாஸ், டோலிவுட், பாலிவுட் ஹீரோக்களை சந்தித்து கதை கூறி வந்தார். ஆனாலும் சில வருடங்களாக அவருக்கு எந்த ஹீரோவும் கால்ஷீட் கொடுக்கவில்லை. அதன்பின்னர் அனிமேஷன் திரைப்படம் இயக்க முடிவு செய்திருந்தார் ஏஆர் முருகதாஸ்.

இந்த நிலையில் தான் எதிர்பாராதவிதமாக சிவகார்த்திகேயன் – ஏஆர் முருகதாஸ் கூட்டணி இணைவதாக அறிவிப்பு வெளியானது. மேலும் அமரன் ஷூட்டிங்கை முடித்த கையோடு ஏஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்கே 23 படத்தில் இணைந்தார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்தார் ஏஆர் முருகதாஸ். அதன்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தையும் அவர் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் அடுத்தாண்டு ரம்ஜான் தினத்தில் ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

மூன்று ஆண்டுகளாக எந்த கமிட்மெண்ட்டும் இல்லாமல் ஹாயாக இருந்த ஏஆர் முருகதாஸ், இப்போது ஒரே நேரத்தில் இரண்டு மாஸ் ஹீரோக்களுடன் கூட்டணி வைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், தற்போது சல்மானின் சிக்கந்தர் படப்பிடிப்பும் மும்பையில் ஆரம்பமானது. இதில் சல்மான் கான் பங்கேற்க, முதலில் சிக்கந்தர் டைட்டிலின் கிளிம்ப்ஸ் வீடியோ ஷூட் செய்யப்பட்டுள்ளதாம். இதனால் சீக்கிரமே சிக்கந்தர் படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்திற்கு சிங்கநடை என டைட்டில் வைக்கப்படவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் வித்யுத் ஜம்வால், விக்ராந்த், ருக்மினி ஆகியோரும் லீடிங் கேரக்டரில் நடிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். பட வாய்ப்புகள் இல்லாத போது தரமான கம்பேக் கொடுப்பேன் என கூறியிருந்தார் ஏஆர் முருகதாஸ். சொன்னபடி ஒரேநேரத்தில் எஸ்கே 23, சிக்கந்தர் படங்களை இயக்கும் ஏஆர் முருகதாஸ், மேக்கிங் மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் சம்பவம் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User