தோல் நிறத்தை கூறி என் மக்களை அவமானப்படுத்துவதா?" காங்கிரஸ் சாம் பிட்ரோடவை கடுமையாக சாடிய மோடி

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா கூறிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

May 08, 2024 - 15:07
0 402
தோல் நிறத்தை கூறி என் மக்களை அவமானப்படுத்துவதா?" காங்கிரஸ் சாம் பிட்ரோடவை கடுமையாக சாடிய மோடி

ஊடகப் பேட்டியில் முன்னதாக பேசிய சாம் பிட்ரோடா, இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நம்மால் ஒன்றிணைக்க முடியும் எனக்கூறினார். வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்காவைப் போலவும், கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும் இருந்தாலும், நாம் அனைவரும் சகோதரர்கள் என அவர் தெரிவித்தார். 

பல்வேறு மொழி, மதம், சமையல் மரபுகள், பழக்க வழக்கங்கள் உள்ள போதும் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் தெலங்கானாவில் வாராங்கலில் மக்களவைத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தன்னை யாராவது தவறாகப் பேசினால் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் நாட்டு மக்களை தவறாகப் பேசுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறினார். 

தோல் நிறத்தைக் கொண்டு துஷ்பிரயோகம் செய்வது ஏற்றுக்கொள்ளவே முடியாதது எனவும் அவர் கண்டனம் தெரிவித்தார். மிகுந்த மரியாதை கொண்ட ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை, காங்கிரஸ் தற்போதும் தோற்கடிக்கவே நினைப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 

தேவையற்றவர்களிடம் கருத்துகளைக் கேட்டு ஒரு அமெரிக்க மாமா, கருப்புத்தோல் கொண்டவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக அதானி, அம்பானி குறித்து தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருந்த காங்கிரஸ், மக்களவைத் தேர்தல் நேரத்தில் அமைதியாக இருப்பது ஏன் எனவும் அவர் கேள்வியெழுப்பினார். 

அதானி, அம்பானியிடம் பெற்ற பணம் எவ்வளவு என்பதை ராகுல்காந்தி கூற வேண்டும் எனவும் மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் இருவரிடமும் இருந்து கறுப்புப் பணத்தை பெற்றதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதில் ஏதோ தவறாக உள்ளது எனவும் மக்களிடம் காங்கிரஸ் உண்மையை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User