புழல் சிறையில் ஓராண்டாக தவிக்கும் செந்தில் பாலாஜி.. 40வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் 25ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 40வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Jun 19, 2024 - 15:53
0 1.1
புழல் சிறையில் ஓராண்டாக தவிக்கும் செந்தில் பாலாஜி.. 40வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை இன்று அறிவிப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், தெரிவித்திருந்தது. இந்நிலையில், விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் செந்தில்பாலாஜி. அவருக்கு 2023ஆம் ஆண்டு  ஜூன் 21 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில வாரங்கள் ஓய்விற்குப் பிறகு ஜூலை 17 ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

செந்தில்பாலாஜி ஜாமின் மனு ஒவ்வொரு முறையும் தள்ளுபடி செய்யப்பட்டு, அவரது காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டே வருகிறது. தனக்கு ஜாமின் கிடைக்க வேண்டும் என்பதபதற்காக அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. அதே நேரத்தில் அவரது சகோதரர் அசோக் தலைமறைவாக இருப்பதால் ஜாமின் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறது அமலாக்கத்துறை. 

இது ஒருபுறம் இருக்க இதுவரை 40முறை செந்தில்பாலாஜியின் நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் 25ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 40வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை இன்று அறிவிப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், தெரிவித்திருந்தது. இந்நிலையில், விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்யபட்டு விட்டதால் அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூன் 21ஆம் தேதி வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கி ஆவணங்களை கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User