மதுபான விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி...மெட்ரோ பணிதான் காரணமா?....

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல்.

Mar 28, 2024 - 21:55
0 251
மதுபான விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி...மெட்ரோ பணிதான் காரணமா?....

சென்னையில் மதுபான விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் சேக்மேட் (Sekhmet Club) என்ற தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (மார்ச் 28) இரவு சுமார் 8 மணி அளவில் விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர், மணிப்பூரை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்டடத்திற்குள் 30 பேர் வரை இருந்ததாகவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை கிழக்கு காவல்துறை இணை ஆணையர் தர்மராஜ் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விபத்து தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். 

அப்பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ பணியால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User