மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்... ராஜஸ்தான் இளைஞர் கைது... ஜெயங்கொண்டம் போலீசார் அதிரடி...

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மூட்டை மூட்டையாக, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

May 09, 2024 - 14:14
0 339
மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்... ராஜஸ்தான் இளைஞர் கைது... ஜெயங்கொண்டம் போலீசார் அதிரடி...

ஜெயங்கொண்டம் அடுத்த நால்ரோடு வழியாக கும்பகோணதிற்கு சிலர் சட்டவிரோதமாக குட்கா மற்றும் போதைப் பொருட்களை காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ குட்கா பொருட்கள் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, காரை ஓட்டிச்சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த நீமாராம் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

 

தொடர்ந்து, குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட நீமாராமிடம், குட்காவை யாருக்காக, எங்கு கடத்திச் சென்றார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User