தவிடு வியாபாரியிடம் ரூ.1.64 லட்சம் பறிமுதல்... உரிய ஆவணம் இல்லாததால் நடவடிக்கை...

தவிடு வியாபாரியிடமிருந்து ரூ.1,64 லட்சம் பணம் பறிமுதல்

Apr 05, 2024 - 00:48
0 247
தவிடு வியாபாரியிடம் ரூ.1.64 லட்சம் பறிமுதல்... உரிய ஆவணம் இல்லாததால் நடவடிக்கை...

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - புதுச்சேரி சாலையில், தவிடு வியாபாரியிடமிருந்து ரூ.1,64 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே கீழ் கூத்தப்பாக்கம் பகுதியில் உள்ள திண்டிவனம் - புதுச்சேரி பைபாஸ் சாலையில், தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக  சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்தை இடைமறித்து சோதனை மேற்கொண்டனர்.  அப்போது, பேருந்தில் சென்ற பயணி ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.64 லட்சம் பணம் வைத்திருப்பது தெரியவந்தது.


உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வானூர் தேர்தல் அலுவலர் முருகேசனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பணம் கொண்டு சென்றவர், புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த தனசேகரன் என்பதும், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வந்து, அங்கே தவிடு மூட்டை விற்பனை செய்துவிட்டு பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User