நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம், டியூஷன் அக்கா திட்டம் : தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 

பிஎம் கிஷான் நிதியுதவியில் இருந்து விலக்கப்பட்ட நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Apr 09, 2026 - 11:33
0 422
நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம், டியூஷன் அக்கா திட்டம் : தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 
தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்த தேர்தல் அறிக்கையை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வெளியிட்டார். 

தமிழக சட்டப்பேரவையில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வெளியிட்டார். 10 தலைப்புகளைக் கொண்ட தேர்தல் வாக்குறுதி வெளியாகியிருக்கிறது.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

* காலியான 3 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

* ரேஷன் அட்டைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை

* காவல்துறையில 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் 

* பிஎம் கிஷான் நிதியுதவியில் இருந்து விலக்கப்பட்ட நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்

* முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் பென்சன் கிடைக்க நடவடிக்கை

*6 மண்டலங்களிலும் தனிச் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.

* தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் மன நல மருத்துவமனைகள்

மனநல முதலுதவி செய்ய 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி

* ஆரம்ப சுகாதார மைய வலயைமைப்பு பலப்படுத்தப்படும்

* அரசு பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப உதவியோடு கற்றல். இதற்காக ஆசிரியர்களுக்கு ஏஐ பயிற்சி

* அனைத்து ரேஷன் கடைகளும் புதுப்பிக்கப்பட்ட தரமான அரிசி வழங்கப்படும்

* 2030க்குள் ரேபிஸ் மரணங்கள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும்

* விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்காக வாரியம்

* பாசனக் கால்வாய்கள் மீட்டெடுக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும்

* தமிழகத்தை உலகளாவிய ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை

* இரு மொழிக் கொள்கையே தமிழகத்தில் பின்பற்றப்படும்

* முக்கிய நகரங்களில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை

* குறைந்த விலையில் வீடுகள், விரைவான நிலப்பட்டா வழங்கப்படும்என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User