மெரினா பீச்ல ரோப் கார் வர போகுது: மாநகராட்சி கூட்டத்துல மேயர் அறிவிப்பு 

சென்னை மெரினாவில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் வே கார் வழித்தடம் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

Feb 18, 2026 - 09:34
0 397
மெரினா பீச்ல ரோப் கார் வர போகுது: மாநகராட்சி கூட்டத்துல மேயர் அறிவிப்பு 
மாநகராட்சி கூட்டத்துல மேயர் அறிவிப்பு 

சென்னை மாநகராட்சி வரவு-செலவு கணக்கை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்ற அறிவிப்புகள் பின்வருமாறு: "சென்னை மாநகராட்சி பூங்காக்களில் மரங்கள் மூலம் பிராணவாயு உற்பத்தி செய்ய ஏதுவாக பசுமை சென்னை திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

பொதுமக்கள் பங்கேற்கும் சென்னை திட்டம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அறிமுகம் செய்யப்படும். சென்னை பக்கிங்காம் கால்வாய் வழித்தடத்தில் நகர்ப்புற பசுமையாக்கள் திட்டம் ரூ.45 கோடியில் மேம்படுத்தப்படும்.சென்னையில் அண்ணா நகர், தி.நகர், நுங்கம்பாக்கம், அடையாறு போன்ற இடங்களில் மின் வாகன மின்னேற்ற நிலையம் அமைக்கப்படும்" . மெரினா, பெசன்ட் நகர், வண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 20 முக்கிய பகுதிகளில் சீரமைக்கப்பட்ட ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்படும்.

தொற்றுநோய் மருத்துவமனையில் புறநோயாளி பிரிவு கட்டடம் கட்ட ரூ.6 கோடி ஒதுக்கீடு. *கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் ஹெச்பிவி சோதனை கிட் கொள்முதல் செய்ய சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி பொது-தனியார் பங்களிப்புடன் 14 மண்டலங்களில் நிறுவப்படும். சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு கோடைக்காலங்களில் குளிர்ச்சியான மோர் தர புதிய திட்டம்.

மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை அமைக்கப்படும். என பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User