ரவி மோகன் காதலி கெனிஷாவுக்கு 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம்: ஷார்ஜா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 

இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ரவி மோகனின் தோழியும், காதலியுமான கெனிஷாவுக்கு  5 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதித்து ஷார்ஜா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jun 06, 2026 - 10:29
0 605
ரவி மோகன் காதலி கெனிஷாவுக்கு 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம்: ஷார்ஜா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 
கெனிஷாவுக்கு 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம்

நடிகர் ரவி மோகனின் தோழியான கெனிஷா, ஆர்த்தி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டு வந்ததாகக் கூறி ஆர்த்தி ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆர்த்தி குறித்து கருத்து பதிவிட கெனிஷாவுக்குத் தடை விதித்தது.  நீதிமன்ற உத்தரவு மற்றும் தொடர்ச்சியான ஆன்லைன் விமர்சனங்களால் மனமுடைந்த கெனிஷா, ரவி மோகனுடன் தான் கொண்டிருந்த தொடர்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஷார்ஜா நகரில் வசித்த இந்திய பெண் ஆன்லெட் மெர்லின் என்பவருக்கு எதிராக, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நடிகர் ரவி மோகனின் தோழி கெனிஷா மற்றும் அருணா வீரராகவன் மீது  அல்புகாரியா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

ஆன்லெட் மெர்லின் அளித்த புகாரின் அடிப்படையில் கெனிஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த  வழக்கை விசாரித்த  ஷார்ஜா நீதிமன்றம். இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியும் இருவரும் ஆஜராகவில்லை. இருவர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தலா 5 ஆயிரம் (இந்திய மதிப்பில் சுமார் 1.30 லட்சம் ரூபாய்) திர்ஹாம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User