பெத்தி திரைப்பட விமர்சனம்

அடையாள ஆவணங்கள் இல்லாமல் வாழும் ஒரு கிராமத்தில் ரயில் நிற்க வைப்பதே ஹீரோ ராம் சரணின் லட்சியம். அதற்காக பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு இறுதியில் வெற்றி பெற்று தனது இலக்கை அடைகிறார். ஆனால், கதை, திரைக்கதை, லாஜிக் மற்றும் காட்சியமைப்புகள் நம்பகத்தன்மையின்றி இருப்பதாக விமர்சனம் கூறுகிறது. நடிகர்களின் முயற்சி, ஏ.ஆர். ரஹ்மானின் இசை, ரத்னவேலுவின் ஒளிப்பதிவு ஆகியவை இருந்தும் படம் பெரிதாக ஈர்க்கவில்லை என்பதே கருத்து.

Jun 11, 2026 - 09:53
Updated: 2 months ago
0 179
பெத்தி திரைப்பட விமர்சனம்
குமுதம்

குமுதம் விமர்சனக் குழு

பெயரில்லாத ஓர் ஊரில் ஆதார், ரேஷன் என எந்த அட்டையும், அடையாளமும் இல்லாமல் வாழும் 1400 பேரில் ஒருவன்தான் ஹீரோ ராம் சரண் நிற்காமல் அந்த ஊரைக் கடந்து செல்லும் ஒரு ரயிலை அந்த ஊரில் நிற்க வைப்பதுதான் அவரது லட்சியம்.

அதற்காக ராம்சரண் கிரிக்கெட் மல்யுத்தம், ஓட்டப்பந்தயம்னு மூணு விளையாட்டையும் அவர் இஷ்டத்துக்கு விளையாடி, கிளைமாக்ஸில் பாகிஸ்தான் வீரரை ஓட்டப் பந்தயத்தில் ஒற்றைக் காலில் ஓடி ஜெயிக்கிறார். உலகத்துக்கே கேட்கிற மாதிரி தன் ஊர் புராணத்தை மைக்கில் ஒப்பாரி வைத்து நிற்காத ரயிலை அவங்க ஊரில் நிற்கவைத்து விடுகிறார். ஜான்வி கபூரும். ஸ்ருதி ஹாசனும் மேலாடை இல்லாத ஒரு நூலாடையில் போட்ட ஆட்டமும் இந்த சாதனை சாத்தியமாக ஒரு காரணம்
பாவம், சிவராஜ்குமார்! அவரோட பயில்வான் ஃபேக்டரியை பார்த்தால் 50 வருஷத்துக்கு முன்னாடி வந்த சைனீஷ் படங்களே இதைவிட ஆயிரம் மடங்கு மேல் என்று சொல்லலாம். ஓட்டப்பந்தயத்தில் சரியான ஸ்டார்ட் கிடைக்கவில்லை என்றாலே. பணால்தான்...

ஆனால், நம்ம ஹீரோ விழுந்து புரண்டு, அழுது லுக்கு விட்டு அப்புறம் ஓடி ஜெயிக்கிறார். அது வரைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானும் வாசிச்சுக்கிட்டே இருக்கிறார். ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும் உயிரைக் கொடுத்தும் ஒண்ணும் முடியல ! எடிட்டரும் கிடைச்ச கேப்ல லவ், சென்டிமென்ட்டுன்னு சொருகிவிட்டிருக்காரு.
மறுபடியும் பொறக்கவா போறோம்."-படத்துல ஹீரோ இந்த ஒரே டயலாக்கை நூறு தடவை சொல்றார் எதுக்குன்னு இயக்குநர் புச்சி பாபு சனாவுக்குத் தெரியலாம்.

'பெத்தி'-மறுபடியும் பார்க்கவா போறோம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User