Rajini: “The one & only..” சூப்பர் ஸ்டார் ரஜினியை வெட்கப்பட வைத்த பாலிவுட் பிரபலம்!

பாலிவுட் நடிகர் அனுபம் கேர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோவை ஷேர் செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jun 11, 2024 - 12:24
0 282
Rajini: “The one & only..” சூப்பர் ஸ்டார் ரஜினியை வெட்கப்பட வைத்த பாலிவுட் பிரபலம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி, இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். முன்னதாக வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினி, ஜூன் 10ம் தேதி முதல் கூலி படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. இதனால் கூலி படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கூலி படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பதால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. 

ரஜினியின் கால்ஷீட் பிரச்சினையா அல்லது லோகேஷ் தரப்பில் தாமதமா என தெரியாமல் ரசிகர்கள் சோகமாக இருந்தனர். இந்நிலையில், கூலி படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடியவில்லை என்பதால் தான் கூலி படப்பிடிப்பு தாமதமாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இன்னொரு பக்கம் வேட்டையன் படத்திற்காக டப்பிங் கொடுக்க ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதன்படி இன்று முதல் வேட்டையன் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், ரஜினியும் அதில் பிஸியாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.        

இந்நிலையில், ரஜினியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஞாயிறு அன்று டெல்லியில் நடைபெற்ற மோடி பிரதமர் பதவியேற்கும் விழாவில் ரஜினி கலந்துகொண்டார். அப்போது ரஜினியை வரவேற்ற பாலிவுட் நடிகர் அனுபம் கேர், செல்ஃபி வீடியோ எடுத்தபடியே அவரை புகழ்ந்து தள்ளினார். அதாவது, “The one & only God's gift to Mankind” என சொன்னபடி ரஜினியுடன் செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார். அதற்கு ரஜினி எப்போதும் போல தனது ஸ்டைலில் சிரித்துக்கொண்டே செம்மையாக வைப் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை அனுபம் கேர் தனது டிவிட்டரில் ஷேர் செய்ய, அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வேட்டையன் படத்தின் டப்பிங் முடிந்ததும் கூலியில் நடிக்கவுள்ள ரஜினி, மேலும் 2 அல்லது 3 படங்களில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த மூன்றில் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்க வாய்ப்புள்ளதாகவும், மேலும் இரண்டு படங்களின் இயக்குநர்கள் யார் என்பது குறித்து விரைவில் தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் இயக்கும் கூலி திரைப்படத்தை அடுத்தாண்டு சம்மர் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User