Rachitha: ஸ்ஸப்பா! இதுதான் ரியல் சம்மர் Glamour… Fire டீசரில் பற்ற வைத்த ரச்சிதா!

சரவணன் மீனாட்சி சீரியல், பிக் பாஸ் சீசன் 5 ஆகியவை மூலம் பிரபலமான ரச்சிதா, Fire என்ற படத்தில் நடித்துள்ளார். ரச்சிதா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

Apr 25, 2024 - 15:37
Updated: 2 years ago
0 1.8
Rachitha: ஸ்ஸப்பா! இதுதான் ரியல் சம்மர் Glamour… Fire டீசரில் பற்ற வைத்த ரச்சிதா!

சென்னை: ஒரெயொரு டீசர் மூலமா ஓவர் நைட்ல கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்கா மாறிருக்காங்க பிக் பாஸ் ரச்சிதா. சரவணன் மீனாட்சி சீரியல்ல மங்கலகரமா வலம் வந்த ரச்சிதாவா இப்படி ராவா கிளாமர் பண்றங்கான்னு ரசிகர்களே மிரண்டு போய் இருக்காங்க. விஜய் டிவில டெலிகாஸ்ட் ஆன சரவணன் மீனாட்சி சீரியல்ல நடிச்சு பிரபலமானவங்க ரச்சிதா. கலர்ஃபுல்லா சேலை, தலை நிறைய மல்லிப்பூன்னு ஒரு குடும்ப குத்துவிளக்காவே சீரியல் முழுக்க வலம் வந்தாங்க.

ஆனாலும் ரச்சிதாவோட பார்வைக்கு கிறங்காத ரசிகர்களே கிடையாதுன்னு சொல்லலாம். இதுதவிர இன்னும் சில சீரியல்ஸ்ல நடிச்ச ரச்சிதா, பிக் பாஸ் சீசன் 6லயும் களமிறங்குனாங்க. பிக் பாஸ் வீட்டுல Paid Holiday Trip போன மாதிரி ஜாலியா என்ஜாய் பண்ண ரச்சிதா, ஒருகட்டத்துல ரொம்ப சீரியஸா விளையாடி டாப் ஃபைனலிஸ்ட்லயும் இடம் பிடிச்சாங்க. பிக் பாஸ் வீட்டுல ஸ்கோர் பண்ண ரச்சிதா, இப்ப Fire ங்குற மூவில ஹீரோயினாவும் கமிட்டாகியிருக்காங்க.

இதெல்லாம் இதுவர யாருக்குமே தெரியாம இருக்குதேன்னு Fire டீம்ல இருந்து நினைச்சாங்களோ என்னவோ, ரச்சிதாவோட பிறந்தநாள் ஸ்பெஷலா ஒரு டீசர் ரிலீஸ் பண்ணி கலங்கடிச்சிருக்காங்க. Saree-அ முட்டி தெரிய ஏத்தினபடி மாடிப்படி ஏறுற ரச்சிதா, ஒரு கட்டத்துல வடிவேலு காமெடி மாதிரி பிறந்தமேனிக்கு மாற, அந்த சீன்லயே ரசிகர்களோட பல்ஸ் பாதரசம் மாதிரி கொதிக்க ஆரம்பிச்சிடுச்சு. அதோட விட்டாங்களா? ஆரம்பம் மூவில ஒயிட் ஷர்ட் போட்டு கிளாமர் ட்ரீட் கொடுத்த நயன்தாரா மாதிரி, ரச்சிதாவும் அதே ஒயிட் ஷர்ட் போட்டு நளினமா நெளிய, ஃபேன்ஸோட மூச்சுக் காத்துல தமிழ்நாடு முழுக்க வெப்ப அலையே வீசுதாம்.

ரச்சிதா இப்படி ராவா இறங்கி அடிப்பாங்கன்னு எதிர்பார்க்காத நெட்டிசன்ஸ், இத எப்பவோ பண்ணிருந்தா நீங்கதான் லேடி சூப்பர் ஸ்டாரா ஆகிருப்பீங்கன்னு ஜொள்ளுலயே ஆஃபாயில் போட்டு ஆறுதல் சொல்லிட்டு இருக்காங்க. இன்னொருத்தரோ பஞ்ச தந்திரம் செகன்ட் பார்ட் எடுத்தா அதுல மேகி கேரக்டருக்கு ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலா ரச்சிதா சும்மா கச்சிதமா இருப்பாங்கன்னு ஆதரவு கொடி காட்டிருக்கார். இதவிட இன்னும் கில்மாவா கமெண்ட்ஸ் பண்ண நெட்டிசன்கள், First Fire படத்தோட ரிலீஸ் எப்போன்னு சொல்லுங்கப்பான்னு கெஞ்சாத குறையா கெஞ்சிட்டு இருக்காங்க.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User