Raayan: ராயன் ரிலீஸ் தேதி... தனுஷின் மிரட்டல் லுக்... மெர்சலாக்கிய புதிய அப்டேட்!

தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் ரிலீஸ் தேதி குறித்து, படக்குழு புதிய அப்டேட் கொடுத்துள்ளது.

Jun 25, 2024 - 17:55
0 386
Raayan: ராயன் ரிலீஸ் தேதி... தனுஷின் மிரட்டல் லுக்... மெர்சலாக்கிய புதிய அப்டேட்!

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான தனுஷ், பவர் பாண்டி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள தனுஷ், தனது 50வது படமான ராயன்-ஐ இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கேங்ஸ்டர் ஜானர் மூவியாக உருவாகியுள்ள ராயன், ஜூன் 13ம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால், திடீரென ராயன் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தது படக்குழு. இதனிடையே ஏஆர் ரஹ்மான் இசையில் இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகின. அதில், ஃபர்ஸ்ட் சிங்கிள் தனுஷின் மாஸ் பாடலாகவும், இன்னொன்று சந்தீப் கிஷன், அபர்ணா இருவருக்குமான டூயட் படலாகவும் உருவாகியிருந்தன. 

தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். வடசென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். கிட்டத்தட்ட புதுப்பேட்டை படத்தின் அப்டேட் வெர்ஷன் போல இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதேநேரம் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மூவரும் அண்ணன், தம்பிகளாக நடித்துள்ளதாகவும், இது ஆக்ஷன் மூவியாக மட்டுமில்லாமல் எமோஷனலாகவும் ரசிகர்களுக்கான ட்ரீட்டாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

இதனால் ராயன் படத்தின் ஒன்லைன் என்ன என்று தெரியாமல் ரசிகர்களே குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், ஜூன் 13ம் தேதி வெளியாக வேண்டிய ராயன் ஜூலையில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி ராயன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி ஜூலை 26ம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் இன்னும் தொடங்கவில்லை, அதேபோல், தனுஷும் குபேரா படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். இதனால் ராயன் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் இருக்குமோ என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக புதிய போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளது படக்குழு.

அதில் ராயன் ரிலீஸ் தேதி ஜூலை 26ம் தேதி தான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், தனுஷ், எஸ்ஜே சூர்யா இருவரும் எதிரும் புதிருமாக போஸ் கொடுக்க, அதேபோஸ்டரில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மூவரும் வெறித்தனமான லுக்கில் கெத்து காட்டுகின்றனர். இதனால் ராயன் சம்பவம் தியேட்டரில் ரசிகர்களை அதிர வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயன் புதிய போஸ்டரை தொடர்ந்து, படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாவதோடு, இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெறும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 28ம் தேதி தனுஷ் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User