Premalu: ஆபாச வார்த்தைகளுடன் வெளியான பிரேமலு தமிழ் ட்ரைலர்… ரசிகர்களோட ரியாக்‌ஷன்ஸ் பாருங்க!

மலையாளத்தில் கடந்த மாதம் 9ம் தேதி ரிலீஸான பிரேமலு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் தமிழ் டப்பிங் வரும் 15ம் தேதி வெளியாகும் நிலையில், தற்போது அதன் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Mar 13, 2024 - 15:58
Updated: 1 year ago
0 407
Premalu: ஆபாச வார்த்தைகளுடன் வெளியான பிரேமலு தமிழ் ட்ரைலர்… ரசிகர்களோட ரியாக்‌ஷன்ஸ் பாருங்க!

மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் படங்கள் அதிரி புதிரியாக ஹிட் அடித்தன. மம்முட்டி நடித்த பிரம்மயுகம் மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் மாஸ் காட்டியது. அதனைத் தொடர்ந்து ரிலீஸான பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, பாக்ஸ் ஆபிஸிலும் சம்பவம் செய்துள்ளன. பிரேமலு 100 கோடிக்கு அதிகமாகவும், மஞ்சும்மல் பாய்ஸ் 160 கோடி ரூபாய் வரையும் கலெக்‌ஷன் செய்துள்ளன.  

இந்நிலையில் பிரேமலு படத்தை தமிழிலும் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. மலையாளத்தில் உருவான இந்தப் படத்தின் திரைக்கதை கேரளா மட்டுமின்றி சென்னை, ஹைதராபாத்திலும் நடப்பதாக இருந்தது. இதனால் பிரேமலு மலையாள வெர்ஷனுக்கு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து பிரேமலு படத்தின் தெலுங்கு டப்பிங் கடந்த வாரம் ரிலீஸானது. அதேபோல் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ள இந்தப் படம், வரும் 15ம் தேதி வெளியாகிறது.  

இதனையடுத்து பிரேமலு தமிழ் வெர்ஷனுக்கான ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்ததைப் போலவே பிரேமலு தமிழ் ட்ரைலர் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அதில் இடம்பெற்றுள்ள ஆபாச வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக ‘ஐட்டம்’ என்ற வார்த்தைக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அதேபோல் ஹீரோவை பார்த்து அவரது நண்பர் பேசும் ஆபாச வசனமும் சர்ச்சையாகியுள்ளது.

 

மமிதா பைஜூ, நஸ்லென் கே கஃபூர், மேத்யூ தாமஸ் நடித்துள்ள பிரேமலு படத்தை, கிரிஸ் இயக்கியுள்ளார், ஃபஹத் பாசில், திலீஸ் போத்தன் இணைந்து தயாரித்துள்ளனர். நாளை மறுநாள் தமிழில் ரிலீஸாகும் பிரேமலு மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் கலங்கடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷனை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. https://revistaparadigma.com.br/

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User