Pradeep Ranganathan: கோடிகளில் சம்பளம்… பிரதீப் ரங்கநாதனை தட்டித் தூக்கிய தயாரிப்பு நிறுவனம்

கோமாளி, லவ் டுடே படங்கள் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

Apr 06, 2024 - 17:51
0 292
Pradeep Ranganathan: கோடிகளில் சம்பளம்… பிரதீப் ரங்கநாதனை தட்டித் தூக்கிய தயாரிப்பு நிறுவனம்

சென்னை: ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்து லவ் டுடே மூலம் கெத்து காட்டினார். கோமாளி 50 கோடிக்கும் அதிகமாக வசூலிக்க, லவ் டுடே 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது. இந்த இரண்டு படங்களுமே மினிமம் பட்ஜெட்டில் உருவாகி வசூலில் சம்பவம் செய்திருந்தன. முக்கியமாக லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனே ஹீரோவாகவும் நடித்திருந்தார். லவ் டுடே ஹிட்டுக்குப் பின்னர் பிரதீப்க்கு பல வாய்ப்புகள் தேடிச் சென்றன. ஆனால் அவர் கோடிகளில் சம்பளம் கேட்டதால் அந்த வாய்ப்புகள் வந்த வழியே ரிட்டர்ன் ஆகின.  

ஒருகட்டத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் நடிக்க கமலிடமே 20 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டதாக சொல்லப்பட்டது. இதனால் இந்தப் படம் தற்போது லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் பேனரில் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்துக்கு லவ் இன்ஸுரன்ஸ் கார்ப்பரேஷன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரதீப் உடன் எஸ்ஜே சூர்யா, க்ருத்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.  

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனது புதிய படத்தை இயக்க ரெடியாகிவிட்டார். அதன்படி பிரதீப்பின் அடுத்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் அவரே ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User