பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் - மயிலாடுதுறை ஆட்சியர் ஆய்வு

கரும்பு கொள்முதலை பொருத்தவரை விகிதாச்சார முறையில் அனைத்து விவசாயிகளிடமிருந்தும் கரும்புகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

Jan 08, 2024 - 12:41
Updated: 3 years ago
0 161
பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான   கரும்பு  கொள்முதல் -  மயிலாடுதுறை ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை வட்டம் மன்னம்பந்தல் ஊராட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக கொள்முதல் செய்ய உள்ள முழு நீள கரும்புகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:”தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 432 நியாயவிலை கடை இயங்கி வருகிறது. தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிடும் வகையில் நாளை முதல் 10.1.2024 வரை வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும்  வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின் உயரம் 6 அடி இருக்க வேண்டும். எனவே கரும்பு கொள்முதலை பொருத்தவரை விகிதாச்சார முறையில் அனைத்து விவசாயிகளிடமிருந்தும் கரும்புகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

 இந்த ஆய்வின் போது வேளாண்மைதுறை இணை இயக்குநர் சேகர், நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை)ராஜேந்திரன்,மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User