பிரதமர் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி... காங்கிரஸாரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்!

Feb 27, 2024 - 15:59
Updated: 2 years ago
0 145
பிரதமர் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி... காங்கிரஸாரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்!

திருப்பூர் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகையை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தடைந்துள்ளார். இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பாஜக விவசாயிகளை வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 200 பேர் கறுப்புக் கோடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராக காங்கிரசார் பல்வேறு முழக்கங்களை எழுப்பிய நிலையில், பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு நடவடிக்கையாக போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரையும் கைது செய்த போலீசார், தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User