மசாஜ் சென்டரில் மஜா.. சென்னையில் சட்டவிரோதமாக இயங்கிய ஸ்பாக்களுக்கு சீல்

May 07, 2024 - 16:40
0 612
மசாஜ் சென்டரில் மஜா.. சென்னையில் சட்டவிரோதமாக இயங்கிய ஸ்பாக்களுக்கு சீல்

சென்னையில் கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு சீல் வைத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

சென்னையில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார்கள் வருவதும், பின்னர் அங்கு காவல்துறையினர் சோதனை நடத்துவதும் அடிக்கடி நிகழ்வதுண்டு

அந்த வகையில் சென்னையில் சில ஸ்பாக்களில், மசாஜ் செய்யப்படுவதாக கூறி, பாலியல் தொழில் நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னை காவல்துறையின் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதன்படி கடந்த ஒரு மாதத்தில் கோயம்பேடு, அண்ணா நகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஸ்பாக்களில், தனிப்படை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர். அப்போது மசாஜ் என்ற பெயரில், 55 சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து 55 மசாஜ் சென்டர்களையும் சீல் வைத்து நடவடிக்கை எடுத்த தனிப்படை காவல்துறையினர், ஸ்பாக்களின் உரிமையாளர்கள் 55 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User