"என் வழி தனி வழி" : பேருந்தை வழிமறித்த "படையப்பா" -  பீதியடைந்த பயணிகள்…  

Mar 01, 2024 - 15:59
0 232
"என் வழி தனி வழி" : பேருந்தை வழிமறித்த "படையப்பா" -  பீதியடைந்த பயணிகள்…  

மூணாறில் அரசு பேருந்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.  

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் படையப்பா மற்றும் கொம்பன் ஆகிய 2 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தும், சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்தும் அச்சுறுத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக படையப்பா யானை தென்படாதநிலையில், தேனி மாவட்ட எல்லையான கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் தற்போது படையப்பா யானை சாலைகளில் வலம் வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நைமக்காடு எஸ்டேட் பகுதி அருகே உள்ள சாலையில் சென்ற லாரியை மறித்து நின்ற படையப்பா யானை நேற்றிரவு (பிப்.29) மூணாறில் பயணிகளை ஏற்றி வந்த தமிழக அரசு பேருந்தை வழிமறித்துள்ளது. படையப்பா யானை பேருந்து முன் வந்து நின்றதும் பேருந்தில் இருந்த பயணிகள் பீதியடைந்து பேருந்தை பின்நோக்கி இயக்க ஓட்டுனரிடம் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் சுமார் ஒரு மணி நேரமாக பேருந்தை நகரவிடாமல் சிறைபிடித்த படையப்பா யானை, பின்பு அங்கிருந்து சென்றுள்ளது. இதனை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User