லண்டனில் கொல்லப்பட்ட மகன்... பரிதவிக்கும் பெற்றோர் - அரசுக்கு கோரிக்கை

Feb 25, 2024 - 12:42
0 343
லண்டனில் கொல்லப்பட்ட மகன்... பரிதவிக்கும் பெற்றோர் - அரசுக்கு கோரிக்கை

லண்டனில் கொலை செய்யப்பட்ட மகனின் உடலை இந்தியாவுக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மருதமலை பகுதியை சேர்ந்தவர் பட்டாபிராமன். ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். விக்னேஷ் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 14-ம் தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.

பணி முடிந்து வீடு சென்று கொண்டிருந்த அவரை, காரில் வந்த ஒரு கும்பல் மோதிவிட்டு, கொடூரமாக தாக்கி கொலை செய்தது. சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்து லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மகனின் உடலை இந்தியாவுக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய - மாநில அரசுகளுக்கு தந்தை பட்டாபிராமன் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். மகன் உயிரிழந்த 10 நாட்களாகியும் உடலை காண முடியாமல் பரிதவிப்பதாக உருக்கமாக தங்கள் வேதனையை பட்டாபிராமன் பதிவு செய்து இருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User